இலஞ்சம் பெற்ற அதிபருக்கு 20 வருட சிறை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மாத்தளை விஜய வித்தியாலயத்தில் முதலாம் தரத்துக்கு மாணவர் ஒருவரை சேர்த்துக்கொள்வதற்காக, இரண்டு இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரி அதில் ஒன்றரை இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டிற்காக, பாடசாலை அதிபருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன், 20,000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவரை சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கையில் போதே, மாணவரின் தந்தையிடம் அதிபர் குறித்த தொகையினை இலஞ்சமாக பெற்றுள்ளார்.

மாத்தளை விஜய வித்தியாலயத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு அதிபராக கடமையாற்றிய கலுஆராச்சிகே தயாவதி (47) என்பருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.