உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்தவின் அறிவுரை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

உள்ளூராட்சி மன்ற பிரதிநிதித்துவத்தை வருவாய் ஈட்டும் தொழிலாக மாற்றக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விஜயாராமவில் இன்று இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களுடனான சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த கருத்தை முன்வைத்ததுடன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களுடன் இணைந்து செயற்படவேண்டிய முக்கியமான தரப்பினர் என்ற நிலையை அவர்கள் உணர்ந்து செயற்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.