ஆஸி. அணியில் இருவர் அதிரடி நீக்கம்: காரணம் வெளியானது

விளையாட்டு

பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் உபதலைவர் டேவிட் வேனர் ஆகிய இருவரும் தமது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த டெஸ்ட் போட்டிக்கான தலைவராக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்கா அணியுடன் கேப்டவுனில் இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் விசாரணைகளை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளது.