இரசாயன மருந்து இறக்குமதி தடை விவகாரம்: பரிந்துரைகள் விரைவில் சமர்ப்பிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

க்லைபோசேற் இரசாயன மருந்து வகையினை இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை தொடர்ந்தும் நீடிப்பது தொடர்பான நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இரசாயன மருந்துகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த சிறுநீரக நோய் காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு க்லைபோசேற் இரசாயன மருந்துகள் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டது.