பெரும்பாலான உறுதிமொழிகள் நிறைவேற்றம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இதன் அனுகூலங்கள் மக்களுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ள போதிலும், இதுவரை பூர்த்தி செய்யப்படாத சில விடயங்களின் அடிப்படையில் சிலர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.