உள்விவகாரங்களில் தலையிட்டதில்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டதில்லையென சீனா அறிவித்துள்ளது.

சீனாவின் இலங்கைக்கான தூதுவர் செங் க்சூயன், இலங்கை தேசிய பொருளாதார சபையின் பொதுசெயலாளரை சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளதுடன், பரஸ்பர கௌரவம், நியாயம் மற்றும் நீதி என்பவற்றுடன் இருதரப்புக்கும் வெற்றியளிக்கும் வகையிலான புதுவித சர்வதேச தொடர்பினை சீனா கட்டியெழுப்பி வருவதாகவும், இதன் அடிப்படையில் இலங்கையுடனான சீனாவின் ஒத்துழைப்பானது, பொருளாதார மற்றும் சமுக அபிவிருத்தியை இலக்காக கொண்டு மக்களுக்கு பலனை சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.