பால்மா, எரிவாயு விலை அதிகரிப்புக்கு அனுமதியில்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பால்மா மற்றும் எரிவாயு விலைகளை அதிகரிக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லையென வணிக கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் இந்திகா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சின் பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில், பால்மாவின் விலையை 100 ரூபாவாலும், எரிவாயு விலையை 275 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு உரிய நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ள போதிலும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை எனவும், இந்தப் பொருட்களின் விலை மாற்றங்கள் பண்டிகைக் காலத்தில் மாறமாட்டாது எனவும் தெரிவித்தார்.