வீட்டுப் பணியாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

வீட்டுப் பணியாளர்களாக தொழில்புரிவோரின் நலன்கருதி அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பொலன்னறுவை மாவட்டத்தில் தொழிலாளர் காரியாலயம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது தொழில் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.