இராஜதந்திரிகளை வெளியேற்ற ரஷ்யா தீர்மானம்

உலகச் செய்திகள்

பிரித்தானியாவுடன் ஏற்பட்ட இராஜதந்திர முறுகலின் காரணமாக, மேற்குலக நாடுகளின் 23 இராஜதந்திரிகளை வெளியேற்ற ரஷ்யா தீர்மானித்துள்ளது.

அத்துடன், ரஷ்யாவிலுள்ள பிரித்தானிய தூதரகத்தின் பணிக் குழுவினரை வரையறைக்குட்படுத்தவும் ரஷ்யா தீர்மானித்துள்ளது. பிரித்தானியாவினால், ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்ட இராஜதந்திர கட்டுப்பாடுகளுக்கு எதிர் நடவடிக்கையாகவே ரஷ்யா இதனை மேற்கொண்டுள்ளதாக சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.