பாதாள உலகக் குழுவை கட்டுப்படுத்தினோம் – முன்னாள் ஜனாதிபதி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தமது ஆட்சிக் காலத்தில் பாதாள உலகக் குழுவினரின் நடவக்கைகளை கட்டுப்படுத்த முடிந்திருந்தாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை பகுதியில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடுகளின் மூலம் கொலை செய்யப்படுகின்றனமை தொடர்பான செய்திகளே ஊடகங்கள் வாயிலாக தற்போது கேட்க முடிவதாகவும், கடந்த இரண்டு, மூன்று தினங்களில் கொழும்பில் மாத்திரம் இது போன்ற ஆறு கொலைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான நிலை நாட்டில் ஏன் ஏற்படுகின்றது? இவற்றுக்கு யார் மீது குற்றம் சுமத்தவது என்றும், இவற்றை யாரால் நிறுத்த முடியும் என்று தமக்குத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பாதாள உலகக் குழுவினரை கட்டுப்படுத்தி, போதைப்பொருளில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கவும் தமக்கு முடிந்திருந்தாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.