அடுத்த வாரம் டெங்கு வாரம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அதிக டெங்கு பாதிப்புக்குள்ளான 15 மாவட்டங்களின் 50 பொதுசுகாதார பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கும் அதேவேளை, குறித்த பிரதேசங்களில் உள்ள வீடுகள் மற்றும் தனியார், அரச நிறுவனங்கள் பாடசாலைகள் ஆகியனவற்றிற்கு சுகாதார குழுக்கள் நேரடியாக விஜயம் செய்து கண்காணிப்புகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.