சாதாரண தர பரீட்சை சித்தியடைவு அதிகரிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடிப்படையில் சித்தியடைவு வீதம் அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 9,960 மாணவர்கள் அனைத்து பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளதாகவும், கணித பாடத்தில் சித்தியடைந்த வீதம் இம்முறை அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ள கல்வி அமைச்சு, 2017ஆம் ஆண்டு சாதாரண தர பெறுபேறுகளின் பிரகாரம், உயர் கல்வியைத் தொடர்வதற்கான மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு 69.94 சதவீத மாணவர்கள் தகுதி பெற்றிருந்தமையுடன் 2017ஆம் ஆண்டின் பெறுபேறுகளின் படி 73.05 சதவீத மாணவர்கள் உயர் கல்வியை தொடரக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளமைக்கு அமைவாக, இம்முறை உயர் கல்வியை தொடரக்கூடியவர்களின் எண்ணிக்கை 3.11 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.