கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிப்போம் – உயர் கல்வி அமைச்சு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வுகள் கிடைக்கவில்லையென அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்ததுடன், இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

32ஆவது நாளாகத் தொடரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பல்கலைக்கழக செயற்பாடுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாதாந்த நிலுவை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்விசாரா ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.