ஏப்ரல் வரை உஷ்ணம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நிலவும் உஷ்ணமான வானிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காற்றின் வேகம் குறைவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகளால் வெப்பமான வானிலை அதிகரித்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், கடந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 1 முதல் 3 செல்சியஸ் வரை அதிகரித்ததாக தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அநுராதபுரத்தில் அதிக வெப்பம் நிலவியதுடன், 36.2 பாகை செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Trending Posts