முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் விஷேட சந்திப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளதுடன், நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை அதுதொடர்பில் விரிவாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் அந்த கட்சியினுள் இரகசிய கலந்துரையாடல்கள் நடாத்தப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பு இன்னும் பல பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக அதன் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 2ஆம், 3ஆம் திகதிகளில் குறித்த சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.