காலவரையற்ற போராட்டம்

இந்தியச் செய்திகள்

இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்களினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், இலங்கை தரப்பினரால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்குமாறு அவர்கள் கோரி, மீன்பிடிசார் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாகவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.