பொது நோக்கத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நாட்டின் அபிவிருத்திக்காக அனைத்து தரப்பினரும் பொது நோக்கத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது நாட்டுக்காக பொது நோக்கத்தின் அடிப்படையில் செயற்பட்டதன் காரணமாகவே அந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். எனவே தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களிலிருந்து விலகி நாட்டுக்காக பொது நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அனைத்து அரசியல் தலைவர்களும் அரசியல் நிறுவனங்களும் செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.