இறுதி முடிவு மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் இறுதி முடிவு குறித்து, தற்போது நாட்டுக்கு தெளிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்டான பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இன்று நாட்டில் இடம்பெறும் சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். அரசாங்கத்தின் நிர்வாக திறமையின்மையே இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதற்கு காரணமாக அமைகின்றன.

தலைவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தீர்மானம் மேற்கொள்ள கடினமாக உள்ளது. யாருடைய தீர்மானத்தை ஏற்பது என்ற குழப்பநிலை நிலவுகின்றது. இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று தற்போது அவசியமாகியுள்ளதுடன், அதன் முடிவு குறித்து நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.