பரபரப்பான சூழலில் அமைச்சரவைக் கூட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் சிலர், அங்கிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்தே, அமைச்சரவை கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேறிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் மேலும் மூன்று முக்கிய கலந்துரையாடல்கள் இன்று இடம்பெறவுள்ளன.