கிளிநொச்சியில் பிறப்பு வீதம் வீழ்ச்சி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் 1 இல் மாணவர்கள் இணைவதில் காணப்படுகின்ற வீழ்ச்சி நிலையானது, கிளிநொச்சி மாவட்டத்தின் பிறப்பு வீதத்தின் வீழ்ச்சியைக் காட்டுவதாக, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இணைத்தலைவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றபோது கருத்துத் தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளர், கடந்த சில ஆண்டுகளாக தரம் 1 இல் மாணவர்கள் இணைவது மிகக்குறைவாகக் காணப்படுகின்றது. கடந்த 2016ஆம் ஆண்டில் 2,565 மாணவர்கள் தரம் 1இல் இணைந்து கொண்டனர். இதேபோன்று 2017ஆம் ஆண்டில் 2,319 மாணவர்கள் தரம் 1இல் இணைந்த கொண்டனர். 2018ஆம் ஆண்டில் 2,180 மாணவர்கள் இணைந்து கொண்டுள்ளனர். இவ்வாறு மாணவர்களின் இணைவு வீதம் மிகக்குறைவடைந்து செல்கின்றது.

இவ்வாறு குறைவடைந்து செல்வதுக்கு இந்த மாவட்டத்திலுள்ள பிறப்பு வீதத்தின் குறைவையே அவதானிக்க முடிகின்றது. பிறப்பு வீதங்களை அதிகரிப்பதுக்கான பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Trending Posts