அப்துல் பட்டா சிசி மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு

உலகச் செய்திகள்

எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக அப்துல் பட்டா அல் சிசி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் நேற்று இடம்பெற்ற நிலையில், இதில் 97 வீத வாக்குகளைப் பெற்று அப்துல் சிசி மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கும் அதேவேளை, எதிர்வரும் 2022ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.