கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அமைச்சருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை நேற்றைய தினம் அமுல்ப்படுத்தாததன் காரணமாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts