காற்றுப் போன பிரேரணை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆரம்பத்திலேயே காற்றுப்போன நம்பிக்கையில்லாப் பிரேரணையாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், தன்னுடைய பாராளுமன்ற வாழ்க்கையில் எவ்வளவோ நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைப் பார்த்துள்ளதாகவும், எனினும் ரம்பத்திலேயே காற்றுப்போன நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்றுதான் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அதேநேரம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பெயரளவில் ரணில் விக்ரமசிங்கவை இலக்காக கொண்டிருந்தாலும் இது அரசாங்கத்தையே இலக்காகக் கொண்டது என்றும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.