சாவகச்சேரி பிரதேச சபை த.தே.கூ வசம்

செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். சாவகச்சேரி பிரதேச சபையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது

31 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 4 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 3 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 2 ஆசனங்களையும், தமிழர் விடுதலை கூட்டணி 2 ஆசனங்களையும், சுயேட்சைக்குழு ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

தவிசாளரை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு வடமாகாண உள்ளூராட்சி ஆணையளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் க.வாமதேவன் பிரேரிக்கப்பட்டதுடன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் க.சதீஸ்வரன் தவிசாளர் வேட்பாளராக பிரேரிக்கப்பட்டார்.

பகிரங்கமாக இடம்பெற்ற தவிசாளருக்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பிரேரிக்கப்பட்ட க.வாமதேவன் 23 வாக்குகளை பெற்று தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், அவரை எதிர்த்து போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் 6 வாக்குகளை பெற்றார்.

இதனைத்தொடர்ந்து இடம்பெற்ற உபதவிசாளர் தெரிவன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வரத்னம் மயூரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •