பதவி இராஜினாமா – அமைச்சர் கபீர் ஹாசிம் அதிரடி அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

பதவி விலகுவதற்கான தனது இராஜினாமா கடிதத்தை அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கவுள்ளதாகவும், கட்சியின் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் தனது செயலாளர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர் விரைவாக கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமைக்கு அமைவாக, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாக கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக இம்மாதம் 07 மற்றும் 8ஆம் திகதிகளில் அந்தக் கட்சியின் மத்திய செயற்குழுவின் விஷேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.