திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல அனுமதி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

களனிப் பல்கலைக்கழகத்தின் கல்வியியலாளர்கள் சங்கம் அவுஸ்திரேலிவாவில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்க விடுத்திருந்த அழைப்பையடுத்து, இதற்கு அனுமதி வழங்கக் கோரி அவர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, அடுத்த மாதம் 10ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை அவுஸ்திரேலியாவுக்கு சென்றுவர திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தவறாக குறிப்பிட்டு, ஆவணம் ஒன்றை தயாரித்து அதனை ஊடகங்களுக்கு வழங்கியமை தொடர்பில், இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.