பிரதமருக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேரையும் கட்சியிலிருந்து நீக்கப்போவதில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வீரக்கெட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், எந்தவொரு சூழ்நிலையிலும் கட்சியுடன் இணைந்திருப்பதற்கு அவர்கள் கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதே ஜனாதிபதியின் எண்ணமெனவும் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில், கட்சியை பலப்படுத்தும் தீர்மானத்திற்கு அமையவே செயற்பட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியினர், தமது கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக செயற்படுவார்களாயின், அதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும், உறுப்பினர்களுக்காக தமது கட்சி எப்போதும் முன்நிற்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளைய (இன்றைய) செயற்குழுக் கூட்டத்தின்போது கட்சியை பலப்படுத்தி, ஒன்றிணைக்கும் தீர்மானத்தைத் தவிர, வேறு எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும், அரசாங்கத்தை சங்கடத்திற்குள்ளாக்கும் எவ்வித தீர்மானத்தையும், தமது கட்சி ஒருபோதும் எடுக்காது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.