ஏலக்காய், சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சட்டவிரோதமாக துபாய் நாட்டில் இருந்து இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிகரெட் மற்றும் ஏலக்காய் தொகையுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் விமான நிலைய சுங்கப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையின் பெறுமதி சுமார் 10 இலட்சத்து 600 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 30 கிலோ கிராம் ஏலக்காய் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ஜா-எல கொடுகொட மற்றும் குருநாகல் பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர். குறித்த சிகரெட் மற்றும் ஏலக்காய் தொகை அரசுடைமையாக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதன் பின்னர் சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Trending Posts