இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தான் திட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இலங்கை மற்றும் 04 நாடுகளுடனான வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஆப்கானிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இந்த நாடுகளுக்கிடையேயான உறவுகள் மேம்படுத்தப்படும் எனவும், இதற்கேற்ற வகையில் இலங்கை, அசர்பைர்ஜான், ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேஷியா மற்றும் துருக்கியுடன் வர்த்தக பாதை ஒன்றை ஆப்கானிஸ்தான் இந்த வருடத்தினுள் ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சிக்கு இவ்வாறான வர்த்தக பாதை முக்கியத்துவம் வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்த திட்டத்தின் மூலம் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான சிறந்த சந்தை உள்ளது என்பதை இலகுவாக அறிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடந்த 2016ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு இலங்கையில் இருந்து 6 லட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், அதேகாலப் பகுதியினுள், ஆப்கானிஸ்தானில் இருந்து இலங்கைக்கு 48 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.