தீர்வுக்கு உயர் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உயர்கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஜயவர்தனப்புர பல்கலைக்கழகக் கிளை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ள அந்த சங்கம், இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த தெழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல்கலைக்கழகங்களின் வழமையான கல்வி நடவடிக்கைகள் மாத்திரமன்றி, ஆய்வு நடவடிக்கைகளுத் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் டொக்டர் நலீன் கனேகொட தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு முறையற்ற சில ஒப்பந்தங்களே காரணமெனவும், உயர் கல்வி அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன இந்த விடயத்தில் பொறுப்பற்று செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Trending Posts