ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் ஆராய அரசு தீர்மானம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விமானப் போக்குவரத்துக்கள் தொடர்ந்து கால தாமதமாவதாக தெரிவிக்கப்படும் அறிக்கைகள் தொடர்பில், ஆராய்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விமான சேவைகள் கால தாமதமாவதற்கான காரணம் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கைகளுக்கு அமைய, கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 900 தடவைகள் குறித்த நிறுவன சேவைகள் கால தாமதமாகியுள்ளதாகவும், இதில், 280 தடவைகள் ஒரு மணித்தியாலயத்தக்கு அதிகம் தாமதமாகியுள்ளதாகவும், ஜனவரி மாதத்தில் 840 தடவைகள் தாமதமாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Trending Posts