உள்ளூர் துப்பாக்கியுடன் இருவர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் காட்டுப்பகுதியில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இருவரை நேற்று கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாருக்க கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது சட்டவிரோதமான முறையில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை கைது செய்ததுடன் துப்பாக்கிகளையும் மீட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •