நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு பலம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தான் ஆதரவாக வாக்களித்திருந்தால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியிருப்பேன் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குருநாகல வெலகெதர விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், கூட்டு எதிர்க்கட்சியினருக்கே நம்பிக்கையில்லா பிரேரணை தேவைப்பட்ட நிலையில், அது தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதற்கு தான் ஆதரவு கொடுத்திருந்தால் எனக்கு அமைச்சரவையில் இருப்பதற்கான எந்தவித தகுதியும் இல்லை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், தான் கண்டிப்பாக அமைச்சரவையில் இருந்து விலகியிருந்திருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மூலமாக அரசாங்கம் பலமடைந்துள்ளதாகவும், ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிணைந்து நாட்டின் எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும், கடந்த மூன்று ஆண்டுகளில் திருடர்கள் பிடிபடவில்லை. இப்போதாவது இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது மிகமுக்கியமாகும் என்றும், அது தொடர்பாக அரசியல்வாதி என்ற வகையில் சட்டத்தை கையில் எடுப்பது சரியில்லை. சட்டப்படி நீதிமன்றத்தினூடாக நடவடிக்கை எடுப்பதே முறையான வழியாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.