அமைச்சரவை அமைச்சர்களே சவாலாக மாறியுள்ளனர்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களே அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு சவாலாக செயற்படுவதாக பொதுஜன முன்னணி குற்றஞ்சுமத்தியுள்ளது.

பத்தரமுல்லையில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளதுடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் உண்மைகளை மாத்திரமே கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்துகின்ற போதிலும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அமைச்சர்களே அரசாங்கத்தின் வேலைதிட்டங்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.