காணாமற் போனவர்கள் மீட்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நக்கிள்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் 07 பேரையும் கண்டுபிடித்து விட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட 07 பேரும் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போதே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.