மரமுந்திரிகைச் செய்கையில் பாரிய வீழ்ச்சி

செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவமழை குறைவடைந்தமை மற்றும் திடீர் மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த முறை மரமுந்திரிகை செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மரமுந்திரி செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென பெய்யும் மழை காரணமாக மரமுந்திரிகை பூக்கள் மற்றும் பழங்கள் பாதிப்படைவதாகவும், இந்த முறை 4,000 ஏக்கர் விஸ்தீரமான காணியில் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதிகளவிலான அறுவடையினை எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மட்டகளப்பு மாவட்டத்திலுள்ள ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, கிரான், செங்களடி, வாகரை போன்ற பிரதேசங்களிலேயே அதிகளவிளான மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •