அரசியல்பீடத்தின் முதல் கூட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று முதன்முறையாக கூடுகின்றது.

அரசியல் பீடத்தின் உறுப்பினர் ஒருவர் இதனை எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் 12 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் பீடம் அண்மையில் நியமிக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் நிமிர்த்தம் இந்த குழு உருவாக்கப்பட்ட நிலையில் இன்றைய கூட்டத்தில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்றும், முக்கியமான தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்பட வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை தோல்வியடையச் செய்வதற்கு, ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன ஆதரவளித்திருந்த நிலையில், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்கள், இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ள அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.