பண்டிகைக் காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பட்டாசு மற்றும் வெடிபொருட்கள் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் கிடைக்காத காரணத்தினால், தாம் பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக பாரம்பரிய பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தாம் பொருளாதார ரீதியாக நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும், புத்தாண்டு காலத்தில் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களுக்கு சந்தையில் நிலவும் கேள்விக்கு ஏற்ற வகையில், உற்பத்திகளை விநியோகம் செய்வதற்கு முடியாது போவதாகவும் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் என்.ஜீ.பண்டிதரத்ன கருத்துத் தெரிவிக்கும் போது, குறித்த மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் இஸ்ரேல் நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில், தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்கள் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.