தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயார்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கைக்கு தேவையான சந்தர்ப்பங்களில் எல்லாம் உதவியளிக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தொட்டையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இலங்கைக்கு இந்தியா ஏற்கனவே பல்வேறு உதவிகளையும், முதலீட்டு வேலைத்திட்டங்களையும் வழங்கியுள்ளது. மேலும் தேவைப்படும் உதவிகளையும், முடியுமான வகையிலும் தொடர்ந்து இலங்கைக்கு வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.