மீனவர்களைக் காணவில்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ். மண்டைத்தீவு கடலிற்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இருந்து நேற்று முன்தினம் (09) யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் மீன்பிடிக்க வந்துள்ள இருவர், படகில் மீன்பிடிக்கச் சென்ற வேளையில் படகு பழுதடைந்த நிலையில் நடு;க்கடலில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலறிந்து கடலுக்கு மீனவர்கள் சென்ற வேளையில் அங்கு மீனவர்களை காணவில்லையென பொலிஸாருக்கு தெரிவித்துள்ள நிலையில், மீன்பிடிக்கச் சென்ற உறவினர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.