யாழ். மாநகர சபையின் கன்னி அமர்வு (Photos)

சிறப்புச் செய்திகள் செய்திகள்

யாழ். மாநகர சபையின் கன்னியமர்வு இன்று (11) சபை கேட்;போர் கூடத்தில் ஆரம்பமாகியது.

யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும், மாநகர வாயிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சபைக்கு சம்பிரதாயபூர்வமாக அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்வில், யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மலர் மாலை அணிவித்து வரவேற்பளித்ததுடன், தமது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். இதன்பின்னர், யாழ். மாநகர சபை உத்தியோகத்தர்கள், அனைத்து உறுப்பினர்களுக்கும் மலர் அணிவித்து கௌரவித்தனர்.

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்;ட் தலைமையில் காலை 9.30 மணியளவில் சபை மௌன இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

இதன்பின்னர், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் கன்னியுரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.