நோயை உருவாக்கும் உயிரினங்களைக் கொண்டுவர தயாரில்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

எந்த நோய் தொற்றுக்கு காரணமாகும், நோய் தொற்றையும் உருவாக்கும் நீர்வாழ் உயிரினத்தையும் நாட்டுக்கு கொண்டுவர தயாரில்லையென மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இரண்டு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக, தொற்றுநோயை உண்டுபண்ணும் இறால் இலங்கைக்கு கொண்டுவரப்படுவதாக பொய்யான வதந்தி பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எயிட்ஸ் போன்ற நோய் தொற்றை உருவாக்கும் இறால்கள் இலங்கைக்கு கொண்டுவரப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், இவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் இறாலையோ வேறு எதனையோ இலங்கைக்கு கொண்டுவர இடமளிக்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.