புதிய அமைச்சரவை உருவாக்கப்படும்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

புதிய அமைச்சரவை ஒன்றே உருவாக்கப்படுமே தவிர, தற்போது இருக்கின்ற அமைச்சரவை மாற்றி அமைக்கப்படாதென அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை உருவாக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில், கட்சியின் மத்திய செயற்குழு இன்று தீர்மானிக்கவுள்ளதுடன், இந்த தீர்மானம் தங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதன் பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.