148 கிலோ கஞ்சா பறிமுதல்

இந்தியச் செய்திகள் செய்திகள்

வேதாளை அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 148 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிஸார் நான்கு பேரை கைது செய்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராமநாதபரம் மாவட்டம் வேதளை அருகே கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கேரளா கஞ்சா கடத்த இருப்பதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தமையைத் தொடர்ந்து, திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை, தனுஷ்கோடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பொலிஸார் தீவிர சோதனை நடத்திய சமயம், மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையொட்டிய பகுதியில் சந்தேகத்திற்க்கு இடமாக நின்று மூன்று கார் பொலிஸாரைக் கண்டதும் வேகமாக காட்டுப்குதிகளுக்குள் சென்றது. இதனையடுத்து பொலிஸார் கார்களை குயவன்தோப்பு பகுதியில் வைத்து விரட்டி பிடித்தனர்.

சொகுசு கார்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபா பெறுமதியான 148 கிலோ உயர்தரமான கேரள கஞ்சாவை பறிமுதல் செய்த பொலிஸார் மூன்று சொகுசு கார்களையும் பறிமுதல் செய்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •