வணபிதா. குணாளன் தியாகராஜாவிற்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

காலஞ்சென்ற வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட வணபிதா. ஜோசப் குணாளன் தியாகராஜாவின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கொழும்பு, ரேமன்ஸ் மலர்ச்சாலைக்கு நேரில் சென்ற வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு மலர்வளையம் வைத்து இன்று டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி செலுத்தியதுடன், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர், நண்பர்களுக்கு ஆறுதலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். இதன்போது ஈ.பி.டி.பியின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சுகயீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை காலமான வணபிதா. குணாளன் தியாகராஜா, யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜாவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரது நல்லடக்கம் விஷேட திருப்பலியைத் தொடர்ந்து நாளை வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.