93 பேர் பலி – காரணம் வெளியானது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம், நாட்டில் நீரில் மூழ்கி 93 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொலிசாரின் தகவல்களின் பிரகாரம், கடந்த ஆண்டில் மாத்திரம் 728 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதுடன், சுற்றுலா பயணங்கள் செல்கின்றவர்கள் பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் நீராட முனைந்தமையால், கடந்த நாட்களில் பல உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 8ஆம் திகதி கண்டி பன்வில பகுதியில் தளுஓய களுபாலத்துக்கு அருகில் நீராடச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன், ஹினிதும நுககல பகுதியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் உள்ளிட்ட நான்கு பேர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.