முல்லைத்தீவில் மோதல் – ஐவர் காயம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

முல்லைத்தீவு, குமுழமுனை பிரதேசத்தில் நேற்று இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 05 பேர் காயமடைந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தின் பின்னர் இந்த மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் காயமடைந்த ஐந்து பேரும் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்பதுடன், தனிப்பட்ட தகராறு காரணமாகவே மோதல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Trending Posts