மீண்டும் கூடுகிறது ஐ.தே.க அரசியல் பீடம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்ட அரசியல் பீடம் எதிர்வரும் 19ம் திகதி மீண்டும் ஒன்று கூடவுள்ளது.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இந்த நடவடிக்கைகளை இந்த மாதம் 30ம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய குறித்த அரசியல் பீடம் தீர்மானித்துள்ளது.

இருந்த போதிலும், அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் விலகிய விடயம், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தாமதத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •