எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள மாற்றம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நாட்டில் நிலவும் பருவமழை காரணமாக எதிர்வரும் சில தினங்களிலும் இடியுடன் கூடிய மழை தொடருமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, இன்று இரவு நேரத்தில் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உடவளவை நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்பலாந்தோட்டை பிரதேசத்தின் 150 ஏக்கர் வயல் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Trending Posts