மேதினப் பேரணியில் ஐ.தே.கவின் முக்கிய அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவிகள் குறித்து, எதிர்வரும் மேதின பேரணியின் போது வெளிப்படுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது வெற்றிடமாகவுள்ள கட்சியின் தவிசாளர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிளுக்கு நியமிக்கப்படவுள்ளவர்கள் அன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளதுடன், இதுவரையில் இல்லாதிருந்த உப தவிசாளர்கள் பலரும் நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •